பயிர் காப்பீடு செய்ய நவ.21 வரை அவகாசம் நீட்டிப்பு

 
farmers

நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு நவம்பர் 21 வரை அவகாசம் அழித்து உழவர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Caste discrimination hinders access to information among farmers, finds  study | Research Matters

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி, ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15-11-2022 என்ற காலவரம்பினை, 30-11-2022 வரை  நீட்டிக்குமாறு தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.


இதனையடுத்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை              15-11-2022-லிருந்து, 21-11-2022 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.