டெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு..

 
 தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட 2-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர்தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து  878 பேரும்,   தாள்2-க்கு 4 லட்சத்து 01 அயிரத்து  886 பேரும்  என மொத்தம்  6 லட்சத்து 32  ஆயிரத்து  764 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆசிரியர்

விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர். விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் மேலும் மாற்றம் செய்யக்கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.