ஓசூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த இ- பைக் திடீரென எரிந்ததால் பரபரப்பு

 
 e bike

ஓசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எலட்ரிக் ஸ்கூட்டர் திடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் ஜூஜூவாடி அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஸ் என்ற இளைஞர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை(ஒகினோவா என்ற) இன்று காலை வேலைக்கு செல்ல முற்படும்போது திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர். பின்னர்
இது குறித்த தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் சிலர் எலக்ட்ரிக் பைக்கை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் பேட்டரி வாகனங்கள் தொடர்ந்து எரிந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.