"குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும்" - ஓபிஎஸ்

 
Ops

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்து வருகிறது என்று  ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 144வது பிறந்த நாளை ஒட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியாரின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  செய்தியாளர்களை சந்தித்த அவர் , "பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்த எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்து பதிலளித்தார். அதில்,  அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அனைவருடனும் பயணித்தவர். கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், பண்ருட்டி ராமச்சந்திரனை உலகத்திலேயே உச்சபட்சமாக இருக்கும் ஐநா சபையில் உரையாற்ற அனுப்பி வைத்தார். அங்கு உரையாற்றி  அதிமுகவுக்கு பெருமை பெற்றுக் கொடுத்தவர் . பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவரின் தொண்டு தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ttn

21 ஆண்டுகள் ஜெயலலிதா உடன் உடன் இருந்து பணியாற்றியவன் நான். அவரது உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் நான் இருப்பதை பலமுறை ஜெயலலிதாவை கூறியிருக்கிறார்.  என்னை பொறுத்தவரை அவரது சொல்தான் என் வேதவாக்கு . அதிமுக ஏழை இளையவர்கள் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் . அவர்கள்  தான் யார் தலைமை இடத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமைகொண்டவர்கள் . அதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆவின் பொருள்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியினால் ஏழை எளிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே கசப்பான மருந்துகளையே தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்து வருகிறது; தாங்கள் குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்றார்.