ஆட்டோ ஓட்டும் மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - வைரலாகும் வீடியோ

 
sp

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி.   எடப்பாடி பழனிச்சாமியின் நண்பரான அவர் தற்போது அவரது அணியில் உள்ளார்.   இவர் ஆட்டோ ஓட்டும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . 

au

அதிமுக தொண்டர் ஒருவர்  தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை எடுத்துச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணியிடம் வாழ்த்து பெற சென்று இருக்கிறார்.   அப்போது தனது ஆட்டோவை ஓட்டி  காட்டி தனக்கு ஆசி வழங்கமாறு கேட்டு இருக்கிறார்.   அந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்ற எஸ்.பி. வேலுமணி,  ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டி காட்டி இருக்கிறார்.   இந்த வீடியோ தான் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

bb

இது குறித்து எஸ்.பி.வேலுமணி,  ‘’கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதி கழகத் தொண்டர் நீரோஜ்குமார், தான் புதியதாக வாங்கிய ஆட்டோவை என்னிடம் காண்பித்து அதை இயக்கி பார்க்கும்படி விதித்த அன்பு கட்டளையினை ஏற்று, அந்த ஆட்டோவை இயக்கி பார்த்தேன். பொதுமக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ என்பதால் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் ஆட்டோவை இயக்க வேண்டும் என்றும், பயணம் செய்யும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி, அந்த தொண்டர் தன் வாழ்வில் வளமும் ஏற்றமும் பெற வேண்டும் என வாழ்த்தினேன்’’என்று கூறியிருக்கிறார்.