முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை- ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் கூறுவதை முதல்வர் கேட்பதில்லை, அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ex minister Rajendra Balaji arrested in Rs 3 crore fraud case | ரூ.3 கோடி  மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது


சிவகாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 106-வது பிறந்த தின விழா பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி, “இன்றைய தினம் திமுக ஆட்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வரும் பட்சத்தில், எப்படி பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும்? இன்றைய தினம் பட்டாசு  தயாரிப்பு என்பது கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல் உள்ளது.

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படவில்லை. உயிரை பணயம் வைத்து அனைவரையும் மகிழ செய்யும் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து பட்டாசு விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.  திமுக ஆட்சியில் எந்த வேலையும், எங்கேயும் நடக்கவில்லை என்பதால் தமிழகமே தவித்துப் போய் உள்ளது. வேட்டி , சேலை விலை ,அரிசி -பருப்பு விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.மந்திரி சொல்வதை முதல்வர் கேட்பதில்லை,முதல்வர் சொல்வதை மந்திரிகள் கேட்பதில்லை. இதைப் போன்று அரசு சொல்வதையும் மக்கள் கேட்க தயாராக இல்லை. மக்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை. 

அதிமுக மீது மக்கள் அபரீதமான பாசம் வைத்துள்ளனர். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை வாழ வையுங்கள். மத்திய அரசு சார்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்” என்றார்