முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை - சகோதரரும் கைது!!

 
tn

முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த மாதம் 22ஆம் தேதி உயிரிழந்தார்.  சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது  நெஞ்சுவலி ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.    இந்த சூழலில் மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

s

விசாரணையின் முடிவில் இம்ரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை முன்னாள் எம்.பி. மஸ்தான் திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக நாடகம் ஆடியது அம்பலமாகியது.  மஸ்தான் கொலை வழக்கு தொடர்பாக அவரது உறவினர் இம்ரான் உட்பட 5 பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். 

tn

இந்நிலையில் செங்கல்பட்டில் திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே ஐந்து பேர் கைதான நிலையில் மஸ்தானின் சகோதரர் ஆதாம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். ரூபாய் 5 லட்சம்  கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.