வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றன - தேர்தல் அலுவலர் பேட்டி

 
Krishnan unni

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன என தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இதனை முன்னிட்டு ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.  

Erode

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு டைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார். இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்தித்த கிருஷ்ணன் உன்னி கூறியதாவது:- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன என்றார்.