ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? - ஜி.கே. வாசனை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று சந்திக்கின்றனர்.  2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜை வீழ்த்தி  திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். தற்போது  திருமகன் ஈவேரா திடீரென மரணம் அடைந்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

election

இந்த சூழலில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஜி.கே. வாசன் உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.  ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

gk

முன்னதாக கிழக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுமா என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜி.கே. வாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.