ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டி??..

 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டி??..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என இரு அணிகளுமே தனித்தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.  தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய நிலையில், பாமக போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை என விலகிக்கொண்டது.  பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.  

தேர்தல்

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு கேட்டு வந்த ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகளிடம்  இரு அணிகளும் இணைந்து  வேட்பாளரை நிறுத்துமாறு  பா.ஜ.க அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  இரு அணிகளும் இணைந்து போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்ட போதும்,  பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.  அதேநேரம் அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதால் யாருக்கு சின்னம் கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டி??..

ஒரு பக்கம் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்றும் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் , இருதரப்பும் ஆதரவு அளிக்க பாஜக தயக்கம் காட்டி வருகிறது.  ஆகையால் இந்த இடைத்தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க  தங்களது வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே  ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்தது குறிப்பிடத்தக்கது.