ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

 
தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.ஆனந்த்,M.Sc., (S.Anand,M.Sc.,) அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இவருக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, தேர்தல் பணியினை சிறப்பாக செய்து வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன