மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறைக்கு ஈபிஎஸ் பயணம்

 
EPS

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.

பெரும்பேறு பெற்ற தமிழகம்… மறுக்கவும்… மறக்கவும் முடியாத முதல்வர் எடப்பாடி  பழனிசாமியின் 10 சாதனைகள்!!! - தமிழ் News - IndiaGlitz.com

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை மட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார். குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நேரில் ஆய்வு செய்கிறார்.