பொறியியல் மாணவர் சேர்க்கை - சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்!!

 
Anna univ

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான  சான்றிதழ்களை பதிவேற்ற இன்று இறுதி நாள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.  பொது கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது .12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அன்றைய தினமே பொறியியல் படிப்புகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.  கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பதிவானது நேற்றுடன் முடிவடைந்தது.

anna

 இதுவரை மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.  இதில் 1. 69 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.  1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.

college

இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றவும், கட்டணம் செலுத்தவும் இன்றே கடைசி நாள் ஆகும். எனவே வாய்ப்பை தவறவிடாமல் மாணவர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும்  www.tneaonline.org  என்ற இணையதளத்தில் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.