கட்டியணைத்து ஆறுதல்! காலில் விழுந்தவரின் காலில் விழுந்து கும்பிட்ட அண்ணாமலை

 
a

 கோரிக்கை வைத்த அந்த மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர் திடீரென்று அண்ணாமலையின் காலை தொட்டு வணங்க பதிலுக்கு அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் அண்ணாமலை.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் மலைவாழ் மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்குச் சென்றார்.   அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்,   மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் இங்கே தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.   இதனால் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று  கண்ணீர் விட்டபடி அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார்.

ஆ

 அண்ணாமலை அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு,  அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்னபடியே, அந்த கோரிக்கை மனுவை பிரித்து படித்தார்.   கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன அண்ணாமலையின்   காலில் விழுந்தார் .  உடனே அவரை தூக்கி விட்ட அண்ணாமலை,  அவரது காலை தொட்டு கும்பிட்டார்.

இதனால் அந்த மலைவாழ் வாலிபர் நெகிழ்ந்து போனார்.  

 கண்ணீர் விட்டபடி நின்ற அவருக்கு,  தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்த பின்னர்,  அதே பகுதியைச் சேர்ந்த பூமிகா வெள்ளையன் என்பவரின் வீட்டிற்கு சென்று,  அந்த மலைவாழ் குடும்பத்திடம் களி உணவை கேட்டு வாங்கி சாப்பிட்டார் அண்ணாமலை.