சென்னையில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

 
tn

 மின் கட்டண உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

tn

அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து நேற்று  கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேசமயம் சென்னையைப் பொருத்தமட்டில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டக் கழகங்களும் ஒன்றிணைந்து, ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக இன்று  காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

tn

இந்நிலையில் சென்னையில் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டக் கழகங்களும் ஒன்றிணைந்து,  திமுக அரசை  கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெறும்  நிலையில்  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு தலைமை தாங்குகிறார்.