நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் சரிவு

 
egg

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யபட்டது. அதன் படி ஒரு முட்டையின் கொள்முதல் விலை 
4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், முட்டை விலை 9, 11 மற்றும் 14ஆம் தேதிகளில் தலா 30 காசுகளும், 16-ஆம் தேதி 40 காசுகளும் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்பட்டது. இதனிடையே கடந்த 21ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை, 5 காசுகள் உயர்த்து 4 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

side effects of egg omlate

இந்நிலையில், ஆடி மாதம் பிறந்ததை அடுத்து தமிழம் முழுவதும் கோயில்களில் பண்டிகைகள் நடைபெற்று வருவதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் முட்டை விற்பனை மந்தமடைந்து அதிகளவு தேக்கம் ஏற்பட்டது.இதனால், முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலையை இன்று மீண்டும் 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஆடி மாதம் முடியும் வரை முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட வாய்ப்பில்லை  என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.