முட்டை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் 1 ரூபாய் 10 காசுகள் சரிவு

 
side effects of egg omlate

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் 1 ரூபாய் 10 காசுகள் சரிந்துள்ளன. 

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் தமிழகம் முழுவதும் முட்டை மற்றும் கறிகோழி சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து முட்டை விலை சரிந்து வருகிறது. கடந்த 9ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், அன்று ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து 5 ரூபாய்ய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல் 11ஆம் தேதி 30 காசுகள் குறைந்து 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல் 14ஆம் தேதி 30 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல் இன்று மீண்டும் 20 காசுகள் விலை குறைந்துள்ளதால், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.