நரிக்குறவ மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்திய எடப்பாடி

 
e

 உளுந்தூர் பேட்டையில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்திருந்தது.   இதனால் பல ஆண்டுகளாக வசிப்பதற்கு வீடுகள் இல்லாமல் அவதி உற்று வந்த நிலையில் , அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் 20 லட்சம் மதிப்பீட்டில் 20 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

h

 அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வீடுகளை திறந்து வைத்தார்.   குடும்பத்தினரின்  வாழ்வாதாரத்திற்காக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாசிமணி, ஊசிமணி உள்ளிட்ட அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களையும் வழங்கினார் .

பின்னர் அவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீர் அருந்தினார்.  அங்கே அவர்களிடம் பேசிய போது,   அதிமுக அரசு நரிக்குறவர் இன மக்கள் , ஏழை மாணவ மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினி வழங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை வகுத்தது என்று குறிப்பிட்டார்.