இந்தியாவிலேயே லஞ்சம் வாங்குவதில் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி தாக்கு

 
eps

இந்தியாவில் சூப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறுகிறார்கள்.ஆனால் மு.க.ஸ்டாலின் லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பராக இருக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் சூப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறுகிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பராக இருக்கிறார்.இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை திமுக துல்லியமாக செய்து வருகிறது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது. தமிழகத்தில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றும், போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்கள் பேருந்து கட்டணம் உயிரும். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு யாராலும் மறக்க முடியாது. தமிழக மக்களை நம்பி ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு கூறினார்.