கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதுதான் உதயநிதியின் அடையாளம்- ஈபிஎஸ்

 
eps

கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதுதான் உதயநிதியின் அடையாளம். அதற்காகவே அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

edappadi palanisamy


அரியலூர் எம்‌.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசொய எடப்பாடி பழனிச்சாமி, “கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதுதான் உதயநிதியின் அடையாளம். ஆனால் சாதாரண தொண்டனாகிய நான் உங்களால் இன்று தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளேன். தொண்டர்களுக்கு என்றும் நன்றியுள்ளனவாக இருப்பேன். திமுக ஆட்சி அமைந்த பின் நீட் தேர்வால் 15 உயிர்கள் பறிபோயுள்ளது. முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? நீட் தேர்வு ரத்து செய்வதன் ரகசியம் எனக்கு தெரியும் என்ற உதயநிதி இப்போது என்ன செய்கிறார்? அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்து கொண்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் வரி விதித்து மக்களுக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிந்தும் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்றாதது ஏன்? மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் எண்ணிக்கை பொய்யானது. ஒருவர் பெயரை 3 வலைத்தளங்களில் மாற்றி, மாற்றி நுழைத்து பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அரைவேக்காட்டுத் தனமாக, பதில் தந்து கொண்டுள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கும் படங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?. இன்றைக்கு 150 படங்கள் வெளியிட முடியாமல் பெட்டிகளில் முடங்கி கிடக்கிறது. அதற்கு காரணம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். அரசு அனுமதியின்றி தினசரி 5 காட்சிகள் இந்நிறுவனத்தின் படங்களை வெளியிடுவது எப்படி?” என கேள்வி எழுப்பினார்.