எடப்பாடி வரவேற்றது டெல்லியின் முடிவு - உதயகுமார் பரபரப்பு

 
ee

 திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமரின் சென்னை பயணத்திற்கு ‘மோடியே திரும்பி போ’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டு செய்ததோடு மட்டுமல்லாமல் திமுகவிரும் அதன் கூட்டணி கட்சியினரும் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கடும் எதிர்ப்பை காட்டினர்.   ஆளுங்கட்சி ஆகிவிட்ட பின்னர் இந்த எதிர்ப்பு காணாமல் போய்விட்டது.  இதை பிரதமர் மோடியே,  ‘கோ பேக்’கையும் பார்த்துவிட்டேன்;  ‘கம் பேக்’கையும் பார்த்துவிட்டேன் என்று நேற்று முன் தினம் நிர்வாகிகளிடம் பேசியபோது சொல்லியிருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் திமுகவின் மாற்றத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

uu

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியத்தின் அருகே யூனியன் கிளப்பில் நடந்த டென்னிஸ் டோர்னமெண்ட் போட்டியை துவங்கி வைத்துவிட்டு அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   ’’திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சுமாக இருக்கிறது.   எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி என்று சொன்னார்கள்.   ஆளுங்கட்சியாக ஆன பின்னர் கம் பேக் மோடி என்று சொல்கிறார்கள்.   திமுக என்றைக்குமே ஒரே இடைப்பாட்டில் இருந்ததில்லை.   மக்களை ஏமாற்றும் வகையில் தான் அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது என்பதற்கு சாட்சியாகவே பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கத்தை நினைக்க வேண்டும்’’ என்றார்.

 அவர் மேலும்,   ‘’பிரதமரிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாமே’’என்றார்.

 என் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்ட புகார் அரசியலுக்கு காழ்ப்புணர்ச்சியில் கொடுக்கப்பட்டிருக்கிறது . அது குறித்து எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார் என்று சொன்னவர்.    மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். பிரதமரை யார் வரவேற்க வேண்டும் என்பது டெல்லியின் முடிவு என்றார்.   மேலும்,  அதிமுக- பாஜக கூட்டணியில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்றார்.