டெல்லியில் அமித் ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ்

 
tn

எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.

ep

 அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் அதிமுகவுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டு அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கடந்த மே மாதமே கட்சி அலுவலகத்தை திறக்க திட்டமிடப்பட்ட நிலையில் உட்கட்சி பிரச்சினை காரணமாக இது ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த சூழலில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறக்க மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நேரில் அழைப்பு விடுக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். 

“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். அதிமுகவில் நிலவிவரும் அரசியல் குழப்பம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அத்துடன் வருமானவரித்துறை வழக்கு நெருக்கடி குறித்தும் பொது குழு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு சாதாரணமாக வந்து இருப்பதால் அதைப் பற்றி பேசவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.