தமிழக அரசியலில் பரபரப்பு....ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

 
eps

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12.45 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஆளுநர் உடனான இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குற்ற சம்பவங்களால் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தெரிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.