அதிமுக பொதுக்குழு வழக்கு - எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்

 
supreme court

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கூண்டோடு அதிமுவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டானர். இதனை எதிர்த்து  ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீா்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. 

eps

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கில் பதில் அளிக்கும் படியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்,  இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தொண்டர்கள் விருப்பம் ,கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது.அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்க்கு முன்னதாக செல்வத்திற்கு நோட்டிஸ் வழங்கப்ட்டது அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர் செல்வம் . என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.