எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
tn

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

tn

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில்  ஆயிரக்கணக்கான பங்கேற்றுள்ளனர்.  மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ,குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு,  விலைவாசி உயர்வு , சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

tn

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 90 நிமிடத்திற்கு மேல் எடப்பாடி பழனிசாமி பேசினார். இன்று சென்னையில் வெயில் வாட்டி வதைத்ததால் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது . அருகில் இருந்த நிர்வாகிகள் உடனடியாக அவரிடம் இருந்து மைக்கை வாங்கிக்கொண்டு அவரை அமரவைத்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு புறப்பட்டார்.   எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்ப்பாட்டத்தில் திடீர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் தொண்டர்கள் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.