புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் - வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம்!!

 
tn

அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

admk office
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் . ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நி இதை தொடர்ந்து   அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார். தற்போது புதிய பொருளாளராக தேர்வான திண்டுக்கல் சீனிவாசனுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.