#Breaking '5 ஆண்டுகளுக்கு பின்'...இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!!

 
EPS

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ep

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக பொது குழுவில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு முறைப்படி பொதுச் செயலாளர் ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

eps ops

 இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் . கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி யாருக்கும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

eps

அத்துடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் பொதுக்குழுவின் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.