பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை - முதல்வர் இன்று ஆலோசனை!!

 
stalin

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

school opening

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தற்போது வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது. அத்துடன் தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி உள்ளது.  அத்துடன் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கி 25 நாட்களுக்கு நீடிக்கும்.  இத்தகைய சூழலில் தினசரி வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

tn

 இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடக்க உள்ளது . கோடை காலம் தொடங்கி உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

tn

இதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.  இதன் மூலம் இன்று மாலைக்குள் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.