முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, வெற்றியை தேடித்தரும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..

 
evks elangovan


முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, எங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள  ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனையொட்டி அவர்,  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளேன். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்.

முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, வெற்றியை தேடித்தரும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..

முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும். தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி தந்த திமுகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்டனர். யார் வேட்பாளராக வர வேண்டும் என திமுக சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் கலந்து பேசி இருப்பார்கள் என நினைக்கிறன். காங்கிரஸ் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என கூறினார். எதிரணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் நிர்மலாமா? வேண்டாமா? என எதிரணி குழப்பத்தில் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.