ஓபிஎஸ்-ஐ சட்டமன்றத்தில் இருந்து விரட்ட நினைக்கும் ஈபிஎஸ்

 
ep

சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அனுமதிக்க வேண்டி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதம் குறித்து  எதிர்க்கட்சித் கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரை சந்தித்து மீண்டும் மனு அளித்தனர். 

eps ops

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எடப்பாடி கே பழனிச்சாமி அண்மையில் நியமித்தார். இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேரவை செயலாளருக்கு எழுதிய கடிதம் குறித்தும், விரைவில் துணை தலைவரை நியமிக்கக்கோரியும் அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உளுப்பினர்கள் பேரவை தலைவரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 

இதில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக பேரவை தலைவர் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் கொள்கைக்கும், சட்டதிட்டங்களுக்கும் எதிராக செயல்பட்டதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்து, அலுவல் ஆய்வுக் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற நிலையில், எடப்பாடி தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து முறையிட்டது குறிப்பிடத்தக்கது.