ஈபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும்! சபாநாயகருக்கு ரவீந்திரநாத் கடிதம்

 
mp ravindranath

அதிமுக எம்பியாக தன்னை கருத்தக்கூடாது என வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம் எழுதியுள்ளார். 

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, செங்கோட்டையனுக்கு முக்கிய  பொறுப்பு.. வாரி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் | Rabindranath Kumar MP, son  of OPS, and ...


அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ. பி. ரவீந்திரநாத்தை கட்சியை விட்டு நீக்குவதாக, அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் . இதன் தொடர்ச்சியாக மக்களவையில் அதிமுக எம் பி யாக ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். 

இதற்கு எதிர்வினையாக, ரவீந்திரநாத்தும் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக பிளவு , பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் உட்பட நிர்வாகிகள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.