தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்

 
edappadi palanisamy rn ravi

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். 

ttn

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகல் 12.45 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு நவம்பர் 30 ஆம் தேதிக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஓபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான தடையும் நீட்டித்துள்ளனர். ஜூலை 11-ந்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு  கூட்டத்திற்கு தடை கோரி ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தது குறிப்பிடதக்கது.