திருப்பதியில் குடும்பத்துடன் ஈபிஎஸ் சாமி தரிசனம்!!

 
tn

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். 

tn

கடந்த ஜூலை பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரப்பின்படி சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக பொது குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  அத்துடன் நேற்றைய தினம் கிட்டதட்ட 70 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

tn


இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்றிரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் வராக சாமியை வழிபட்ட பின் திருமலையில் இரவு தங்கினார். இதையடுத்து இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஏழுமலையானின் தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு  தீர்த்த பிரசாதங்களை வழங்கி ஆசி வழங்கினர்.