தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - இந்திய தேர்தல் ஆணையர் வாழ்த்து

 
election

இந்திய தேர்தல் ஆணையர் தேசிய வாக்காளர்கள் தின வாழ்த்தினை தெரிவித்து கொண்டுள்ளார்.

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்ம், "தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான சனவரி மாதம் 25ஆம் நாள், 2011ஆம் ஆண்டு கொண்டாடப் படுகிறது. முதல் தேசிய வாக்காளர் தினமாக இந்திய குடிமக்களுக்கு வாக்காளர்களாக அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 1950ஆம் ஆண்டு சனவரி மாதம் 25ஆம் நாளான முதல் குடியரசு தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் செயல்பாடு மற்றும் முடிவெடுப்பதில் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக 324ஆம் பிரிவின் கீழ் அரசியலமைப்பு அங்கீகாரத்தை அரசியல் நிர்ணய சபை வழங்கியது. குறைந்த கல்வியறிவு மற்றும் வாக்காளர் பட்டியல் இல்லாத காலத்தில், வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், தேர்தல் நடத்துவதற்கு நிரந்தர, மற்றும் தன்னாட்சி ஆணையத்தை நிறுவியது, அரசியல் நிர்ணய சபையின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த ஒரு நற்சான்றாகும். அமைப்பின் திறன், நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மையானது. 17 மக்களவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றம் துணை குடியரசுத் தலைவர் பதவி ஒவ்வொன்றிற்குமான 16 தேர்தல்கள், இன்று வரையிலான 399 சட்டமன்றப் பேரவை தேர்தல்களில் நிலைநாட்டப்பட்டுள்ளது. 400வது சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. எப்போதாவது நிகழ்கிற பன்னாட்டு அனுபவங்களுக்கு மாறாக. தேர்தல் முடிவுகள் இந்தியாவில் ஒருபோதும் சர்ச்சைக்குள்ளானதில்லை. தேர்தல் தொடர்பான தனிநபர் மனுக்களுக்கு உரிய உயர்நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய குடிமக்களின் நம்பிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. அந்நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்ப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

vote

வலிமை வாய்ந்த மக்களாட்சியை கட்டமைப்பதற்கு அனைத்து மக்களின் வலுவான தேர்தல் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. ஒரு சிறந்த மக்களாட்சியில் தேர்தல்கள் சுதந்திரமாக, நியாயமாக, முறையாக மற்றும் நம்பகத்தன்மையுடன் நடைபெற வேண்டும். அரசு நிருவாகத்தின் மீதான முழு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், அனைத்து வாக்காளர்களையும் சென்றடையும் வகையிலும்அவர்களின் பங்களிப்புடனும் தேர்தல்கள் அமைய வேண்டும். வாக்களிக்கும் உரிமை என்பது அதனை செயல்படுத்தப்படும்போது மட்டுமே அதிகாரம் உடையதாக அமையும். " நமது கடமைகளை நிறைவேற்றாமல், நமது உரிமைகளை தேடுகையில் அவை நமக்கு எட்டாக்கனியாகவே என்றும் இருக்கும்" என்ற மகாத்மா காந்தியின் கூற்று ஒன்றை நாம் இங்கே நினைவு கூற வேண்டும். இந்தியா, 94 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். கடந்த பொதுத் தேர்தல்களில் (2019) 67.4 சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ள நிலையானது, போதுமானதாக இல்லை. வாக்களிக்கத் தவறிய 30 கோடி வாக்காளர்களை வாக்குச்சாவடி செல்ல ஊக்குவிப்பது சவாலாக உள்ளது. விடுபட்ட வாக்காளர்கள் எனப்படுவோர் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஆர்வமற்ற வாக்காளர்கள், ஆர்வமற்ற இளைஞர்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளோர் போன்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் வாக்காளர்ப் பட்டியலில் பதிவு செய்வதும் வாக்களிப்பதும் தன்னார்வ அடிப்படையில் நடைபெறுவது போலவே, வாக்களிக்க வலியுறுத்துதல், வசதி செய்து தருதல் ஆகிய முறைகளும் சிறந்தவையாகும். குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளையும், குறைவாக வாக்களிக்கும் வாக்காளர் பிரிவினரையும் இலக்காகக் கொண்டு இச்செயற்திட்டம் அமைகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், எண்பத்தைந்து லட்சம் மாற்றுத்திறனாளி  வாக்காளர்கள், 47,500 க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களைச் சேர்ப்பதற்கான ஏற்பாட்டு முறையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மக்களாட்சியில் அவர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நூறு வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் நான் நன்றி தெரிவித்தேன். நவம்பர் 5, 2022 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கல்பாவில் மறைந்த ஷியாம் சரண் நேகிக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் (1951), முதல் வாக்காளராக அங்கீகரிக்கப்பட்ட அவர், 106 வயதில் காலமாவதற்கு முன்பு வரை, ஒருபோதும் அவர் வாக்களிக்க தவறியதில்லை. கடமை உணர்வுடன் நாம் நமது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு மறைந்த ஷியாம் சரண் நேகியின் முன்னுதாரண நிகழ்வு நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

election

இளம் வாக்காளர்களே இந்திய மக்களாட்சியின் எதிர்காலமாகத் திகழ்கின்றனர். 2000-ஆம் ஆண்டை ஒட்டியும் அதற்குப் பின்னரும் பிறந்த அடுத்த தலைமுறையினர் நமது வாக்காளர் பட்டியலில் இணையத் தொடங்கியுள்ளனர். வாக்காளர்களாக அவர்கள் இணைந்திருப்பது ஏறத்தாழ இந்த நூற்றாண்டு முழுவதும் மக்களாட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கும். எனவே, மாணவர்கள் வாக்களிக்கும் வயதை அடைவதற்கு முன்பே பள்ளி அளவில் மக்களாட்சிக்கான சிந்தனையை வேரூன்றச் செய்வது மிகவும் இன்றியமையாததாகும். அதே நேரத்தில், இளைஞர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்காக பல்வேறு செயற்பாடுகள் வாயிலாக தேர்தல் நடைமுறைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்களிப்பதில் அக்கறையின்மையை வெளிப்படுத்த முனையும் நகர்ப்புற வாக்காளர்களிடமும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கழிப்பறைகள், மின்சாரம், குடிநீர், சாய்வுதளங்கள் போன்ற உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (AMF) ஏற்படுத்துவதை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துச் செல்கிறது. பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் வசதிகள் நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் ஆணையம் கவனமாக உள்ளது இது நிதி வகையிலும் மதிநுட்பம் வாய்ந்த ஒரு முடிவாகும். வாக்களிக்கும்மக்களாட்சியில், வாக்காளர்கள், தாம் வேட்பாளர்களின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதற்கான முழு உரிமையும் கொண்டுள்ளனர். வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருக்கும் வகையில் வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்கச் செய்வது இன்றியமையாததாகும். இதன் காரணமாகவே, போட்டியிடும் வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் ஏதேனும் நிலுவையிலிருப்பின், அது குறித்து தகவல் நாளிதழில் வெளியிடப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் தேர்தல் அறிக்கையில் நலத் திட்டங்கள் குறித்து வாக்குறுதியளிக்கும் உரிமை இருக்கும்போது, அரசுக் கருவூலத்தின் அவர்களின் நிதி தாக்கங்கள் குறித்தும் சம உரிமை வாக்காளர்களுக்கும் உள்ளது. ஆள் பலத்தை பயன்படுத்துவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தேர்தல் தொடர்பான வன்முறைகளால் வாக்காளர்களின் சுதந்திரமான தேர்விற்கு தடை ஏற்படுத்தும் வகையிலான சில மாநிலங்கள் இன்றளவும் உள்ளன. மக்களாட்சியில் கட்டாயமாக வன்முறைக்கு இடமில்லை. தேர்தலில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவது என்பது மாபெரும் சவாலாக உள்ளது. சில மாநிலங்களில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் குறித்த அளவானது. மற்ற மாநிலங்களை விட அதிகளவில் வழங்கப்படுவதைக் காணலாம். சட்ட செயலாக்க முகமைகளின் தீவிரமான விழிப்புணர்வின் விளைவாக, அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் போது ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பினும், மக்களாட்சியில் நேர்மையான மற்றும் விழிப்பான வாக்காளர்களுக்கு மாற்று ஏதுமில்லை. மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் நிகழும்போது அதை பொதுமக்களே நேரடியாக புகாரளிக்க c-Vigil போன்ற கைபேசி செயலிகள் உதவின. இதன் வாயிலாக தேர்தல் பார்வையாளர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக (100 நிமிடங்களுக்குள்) உரிய நடவடிக்கையை மேற்கொள்ள இது வகை செய்தது. உலகெங்கிலும் மக்களாட்சியின் நம்பகமான தேர்தல் முடிவுகள் வாயிலாக, மாண்புகளைத் தக்கவைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. உண்மைத் தகவல்களையும் கண்ணோட்டங்களையும்/ தவறான செய்திகளையும் சமூக ஊடகங்களில் பேரளவிலும், மிக விரைவாகவும் பரப்பப்படுவது தேர்தல் மேலாண்மைத் தொழில் நுட்பத்தின் ஏனைய கூறுகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் கட்டமைப்பை நிருவகிக்கும் தார்மீக மற்றும் சட்டக் கூறுகளுக்கு கட்டுப்படாமல், மக்களாட்சிக்கு எதிரான நபர்கள், இத்தொழில்நுட்பத்தை வணிகத்திற்குகந்த பயனுள்ள கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

election commision

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும். நூற்றுக்கணக்கான காணொலிப் பதிவுகள் ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அவற்றிற்கான காலவரையறை ஏதுமில்லாத நிலையில், தேர்தல் நிறைவுற்ற பின்பும் குறிப்பாக, முதன்மை தேர்தல் கூறுகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் அமைந்த அத்தகைய பதிவுகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. சமூக ஊடக தளங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு திறன்களை, குறைந்தளவு. இத்தகைய வெளிப்படையான போலி தகவல் பரிமாற்ற முயற்சிகளை தடுக்க பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சுதந்திரமான பேச்சு உள்ளிட்ட பொது வெளிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு இணைந்து பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தேர்தல் நிருவாக அமைப்புகளின் பணிகளை மிகவும் கடினமாக்குகின்ற தவறான தகவல்களைப் பற்றி அறிந்து, சுய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதாகவும், அவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில், வாக்காளர்களுக்கு எளியமுறையிலும் அறம் சார்ந்த வகையிலும் தேர்தல்களை நடத்துவதற்கேற்ப அனைத்து தடைகளையும் நீக்கிடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுள்ள உறுதியை எடுத்தியம்பும் வகையிலும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. 13வது தேசிய வாக்காளர் தினத்தின் (2023) கருப்பொருள் ”வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்" என்பதாகும். வாக்காளர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் கருப்பொருள் உள்ளது என்பது தெளிவாகிறது. குடிமக்கள் தங்கள் கடமையின் ஒரு பகுதியாக, வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளும்போது, அதன் நற்பலன் அரசு நிருவாகத்தில் உறுதியாக உணரப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனிய வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.