12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இ மெயில் கட்டாயம்

 
exam

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையின் முழு விவரம்.! - Seithipunal

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11,மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது, இதனிடையே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 19-ஆம் தேதி  முதல் தொடங்கி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள்  நீட் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இ- மெயில் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தேவைப்படுவதால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி உருவாக்கும் பணிகளை 9- ஆம் தேதி முதல் 12- ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.