இயக்குநரும், நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்
Tue, 24 Jan 20231674527150283

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
விழுப்புரத்தை சேர்ந்த இவர் சினிமா மீதான மோகத்தினால் சென்னைக்கு புலம்பெயர்ந்து எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜா தான், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, ராவணன் , வாழ்க ஜனநாயகம் , சுயவரம் ஆகிய படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் காக்கிச்சட்டை ,விசாரணை ,அறம் ,விக்ரம் வேதா ,மாரி 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
எழுத்தாளரும் நடிகருமான ராமதாஸின் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.