மற்ற மாநிலங்களை பார்க்கும்போது தமிழகத்தில் ஏற்றப்பட்ட மின் கட்டணம் மிகவும் சொற்பம்- துரைமுருகன்

 
durai

வேலூர் மாநகராட்சி முழுவதும் எந்த சாலைக்கு சென்றாலும் புழுதி மாயமாகவும், குண்டும் குழியுமாக இருப்பதற்கு முழு காரணம் அதிமுக அரசுதான், அவர்களை எதிர்த்து தான் பாஜகவினர் கோஷம் போட்டிருக்க வேண்டும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Assembly felicitates Duraimurugan || Tamil Nadu Assembly  felicitates Duraimurugan

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசி குட்டை  அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச  மிதிவண்டி வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு இலவச மிதி வண்டி மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை  வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “வேலூரில் பாஜக கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு உள்ளது என்று கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரின் தடுப்பை மீறி  அலுவலகத்தில் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆளுங்கட்சி என்ற திமிரில் இவர்கள் அத்துமீறி  நடந்துள்ளது இது கண்டிக்கத்தக்கது . அதிமுக ஆட்சி காலத்தில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்.  ஆனால் அத்துமீறல் கைது நடவடிக்கை கையில் அத்துமீறி நடந்ததில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எதுவும் சரிவர நடைபெறவில்லை என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் அத்தனையும் அதிமுக ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள். பல இடங்களில் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் டெண்டர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் இன்னும் பணிகளை முடிக்கவல்லை. இதுவரை நடைபெற்ற குற்றங்களுக்கு வேலைகள் நடைபெறாமல் உள்ளதற்கு முழு காரணம் அதிமுக அரசுதான். அதிமுக அரசு உடன் தான் பிஜேபினர் கூட்டு வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவை எதிர்த்து தான் இன்று பாஜகவினர் மறியல் செய்திருக்க வேண்டும்.

மாநகராட்சி முழுவதும் எந்த சாலைக்கு சென்றாலும் புழுதி மாயமாக உள்ளதற்கும் குண்டும் குழியுமாக இருப்பதற்கும் முழு காரணம் அதிமுக அரசுதான். அவர்களை எதிர்த்து தான் கோஷம் போட்டிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் மின் கட்டணத்தை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் ஏற்றியுள்ள மின் கட்டணம் சொற்பமானது” என தெரிவித்தார்.