தயிர், நெய் விலை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு!!

 
tn

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 

tn
மத்திய அரசு தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்து உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்டுக்கான விலையை 4 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. இந்நிலையில் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தயிர், நெய் ஆகிய பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது.  தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. தயிர் 100கிராம் 10ரூபாயிலிருந்து 12ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்கிறது. ஒரு லிட்டர் நெய்-க்கு ரூ.50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.

tn

ஆவின் பிரிமியம் கப் தயிர் ரூ.40ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.  200மிலி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27லிருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15லிருந்து ரூ.18 ஆகவும், 200 மிலி மோர் பாட்டில் ரூ.10லிருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் 50 கிராம் தயிர் விலையில் மாற்றமில்லாமேல ரூ.5-க்கு விற்கப்படுகிறது.