சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை- 26 ரயில்களை இயக்க திட்டம்

 
metro

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் "946 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில்" ஓட்டுனர் இல்லாத 26 ரயில்களை உருவாக்க "அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா" என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு | Chennai Metro rail  will run from 5.30 am to 11 pm tomorrow | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News


சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகள் 61 ஆயிரத்தி 843 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகிறது. இதில் ஓட்டுனர் இல்லாமல் 3 பெட்டிகள் அடங்கிய 26 ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்)உருவாக்கும் திட்டம் "அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா" என்ற நிறுவனத்துடன் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான நிதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் வடிவமைப்பு,உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல், மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களில் வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.


இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் மெட்ரோ ரயில் 2024 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடுமையான பாதையில் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன் பின்பு மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் முதல் மெட்ரோ  ரயில் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அளவு 40 மாதங்களாகும்.