சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்- ஒப்பந்தம் கையெழுத்து

 
metro

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை  உருவாக்கும் ஒப்பந்தம் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு  946 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு  ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

metro

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில் , சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு . ராஜேஷ் சதுர்வேதி அமைப்புகள் மற்றும் இயக்கம் ) மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் திரு ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் வடிவமைப்பு , உற்பத்தி , சோதனை , தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி , பணியாளர்களுக்கு பயிற்சி உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும் இந்த ஒப்பந்ததின் கீழ் , முதல் மெட்ரோ இரயில் 2024 - ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . 
அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும் . 

அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.