மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி - மக்களுக்கு செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு

 
tn

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது . இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  இங்கு தொடர்ந்து சாதிய ஒடுக்கு முறைகள் நடத்தப்பட்டு வந்ததும் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவின் பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதுடன் , இரட்டை குவளை முறையை பின்பற்றக் கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.  இது தொடர்பாக போலீசார் 5 பிரவுகளி கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். 

tn

இந்நிலையில் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடாக வேறொரு மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் புதிய குழாய்கள் பதிக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது.  மாற்ற குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கும் பணியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தொடங்கி வைத்துள்ளார்.

tn

 அத்துடன் தனியார் அமைப்பின் சார்பில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாமும் கிராமத்தில் நடைபெற்றது. இதில் 50 பேர் பங்கேற்றனர். மனிதக்கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அதிலிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.