கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
Nov 18, 2022, 18:59 IST1668778184418

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுஉயர் கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என்றும்,
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.