திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்

 
m

 தமிழறிஞரும்,  திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் சென்னயில் காலமானார்.  அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

a

 உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நெடுஞ்செழியன் .  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

u

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  ‘’அண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் நெடுஞ்செழியன் அவர்களின் திருவுடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.