குளமான கொளத்தூர் தொகுதி! கழிவுநீர் தேங்கிய நிற்கும் அவலம்

 
கழிவுநீர்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது . 

கழிவுநீர்

குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த 11 மற்றும் பனிரெண்டாம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை கொட்டி தீர்த்தது. இதில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, விளை நிலங்களில் மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் தேங்கிய மழைநீரை, மாநகராட்சி அதிகாரிகள், உடனுக்குடன் சீரமைத்து அகற்றிவருகின்றனர்.

இந்நிலையில்  கொளத்தூர் பூம்புகார் நகரில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. "இதைப் பற்றி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியும், கண்துடைப்புக்காக ஆட்களை மட்டும் அனுப்பி சரியான முறையில் அடைப்பை சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் சாக்கடை கழிவு நீர் தெருவில் ஓடுவதாக" அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

மழைக் காலங்களில் இதுபோன்ற நிலை இருப்பதாகவும் பொது மக்கள் புகார் கூறுகின்றனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.