ஃப்ரிட்ஜே வேண்டாம்.. ஆவினில் ‘டிலைட்’ பால் அறிமுகம்..

 
ஆவின் டிலைட் பால்

குளிர்சாதன வசதியின்றி 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் ஆவின் டிலைட் என்ற பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை,  மதுரை, சேலம் என நாடு முழுவதில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவினில் பால் மட்டுமின்றி தயிர், நெய், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு  வகைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அறிமுகங்களும் உண்டு.  

ஆவின்

அந்தவகையில், 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக    “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” ஆவின் நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இந்த பாலை  குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த “ஆவின் டிலைட்” எனும் பசும் பால்  500 மில்லி லிட்டர் பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த ஆவின் ‘டிலைட்’ என்ற பசும்பால் தயாரிக்கப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.