விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

 
விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..


30 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , முருகன் ஆகிய 4 பேரையும் முதல்நாளே  திருச்சி சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வந்தவர்களில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார் , ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும், விடுதலை செய்து  கடந்த 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனயடுத்து  நேற்று, ஜெயக்குமாரும், ராபர்ட் பயஸும் சென்னை புழல் சிறையில் இருந்தும், முருகன் , சாந்தன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.  அவர்கள் 4 பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் 4 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

அங்கு அவர்களுக்கு எந்தவுத அறையும் ஒதுக்கீடு செய்யாமல், விடிய விடிய காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறிஉத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.