பிறந்தநாள் கொண்டாடுவதில் நம்பிக்கையில்லை.. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு..

 
பிறந்தநாள் கொண்டாடுவதில் நம்பிக்கையில்லை..  வாழ்க்கையை கொண்டாட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு..

 பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது; வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன் என  நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்  அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்கை சந்தித்தார்.

பிறந்தநாள் கொண்டாடுவதில் நம்பிக்கையில்லை..  வாழ்க்கையை கொண்டாட வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு..

அப்போது பேசிய அவர், “இங்கே வந்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் வணக்கம். என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மய்ய தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கைதான் கொளரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன். பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக்கொடுக்கிறேன் அவ்வளவுதான்.

vijay with kamal

அமெரிக்கா முதல் சின்ன குக்கிராமங்கள்வரை பல இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கழிவறையும் முக்கியம்தான் மருத்துவமனையும் முக்கியம்தான். 40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணி, அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன். பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தோழர்கள் நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள்..என் தோழர்கள் செய்யும் பணிகளைக்கூறி அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணி பேசிக்கொண்டிருக்கிறேன்... இதை பார்த்து செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருப்பவர்கள்.. செயலில் ஈடுபடுவார்கள் .. அதற்காகத்தான் இந்த சந்திப்பு.” என்றார்.