சாவி கூர்க்காவிடம் இருக்கு என்பதற்காக பில்டிங் அவருக்கு சொந்தமாகி விடுமா?

 
ku pa

முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் கு.ப.  கிருஷ்ணன் ஆகியோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.  அதன் பின்னர் திருச்சி அண்ணா நகரில் இருக்கும் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 அப்போது அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி இடம்தானே இருக்கிறது என்ற கேள்விக்கு ,   சாவி கூர்க்காவிடம் இருக்கு என்பதற்காக அவருக்கு சொந்தமாகி விடுமா?  சாவி மட்டும்தான் அவரிடம் இருக்கிறது.   அதிமுக அலுவலகம் அனைவருக்கும் சொந்தம் என்றார் கிருஷ்ணன்.

je

 அவரிடம் மேலும்,  வைத்தியலிங்கம் சசிகலா- சந்திப்பு குறித்த கேள்விக்கு,  அது ஒரு இயல்பான சந்திப்பு என்று பதில் அளித்து பதில் அளித்தார்.   அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் நீக்கப்பட்டு விட்டது என்ற கேள்விக்கு,   ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். அந்தப் பணிகளைத்தான் இப்போது அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.   எங்கள் அலுவலகம் விரைவில் எங்கள் கைக்கு வந்து விடும்.   அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.

 அவர் மேலும்,   பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டிக்கு வரட்டும் .  தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் .  அதிமுக சட்ட விதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது .  அதனால் பொதுச்செயலாளர் என்பதும் செல்லாது.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது.  அப்படி ஒன்று இருந்தால் சசிகலா இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் தானே என்று கேட்டார்.