கோவிலில் வழிபட அரசின் ஒப்புதல் தேவையா? அண்ணாமலை ஆவேசம்

 
ann

திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா?சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா? என்று கொதித்தெழுந்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

aaa

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதற்காக சென்னை மாமன்ற பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   தொடர்ச்சியாக இந்துக்களை இழிவு படுத்தி வரும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி  ராசாவே திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களையும் மிஞ்சி விட்டு அவரின் இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.   

இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளார்கள்.   

கோபாலபுரம் குடும்பத்தார் கோவிலுக்கு செல்லும்போது, பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? 
ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா?  என்று ஆவேசப்பட்டுள்ள அண்ணாமலை,

மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த  திமுக அரசின் நடவடிக்கையை  தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்கிறார்.