பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா??

 
bank


பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு   இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி,  மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதனால்  வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.   

bank

அந்தவகையில்,  ஜனவரி முடிய இன்னும் சில தினங்களே  உள்ள நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  அதன்படி பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள் : “
பிப்ரவரி 5 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 11- 2ம் சனிக்கிழமை
பிப்ரவரி 12 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 18 - மகா சிவராத்திரி குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்  விடுமுறை
பிப்ரவரி 19 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 20 - மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம்  மாநிலங்களில் விடுமுறை)
பிப்ரவரி 21 - லூசார் (சிக்கிமில் விடுமுறை)
பிப்ரவரி 25 - 4 வது சனிக்கிழமை
பிப்ரவரி 26 - ஞாயிற்றுக்கிழமை ”

இந்த விடுமுறைகளின்  அடிப்படையில் வங்கிப்பணிகளை திட்டமிட்டு , கடைசிநேர பரபரப்பை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.